Maatchi Meeku Mocha Nagar மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை

மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை
Unknown
Lyrics

Lyrics

1. மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை என் சொல்வேன் – அந்த மங்களம் சேர் மாளிகைக்குள் என்று சேருவேன் 2. பட்டணத்து வீதியெல்லாம் சுத்தப் பொன்னாமே – அங்கு பாடுவோரும் ஆடுவோரும் கோடாக் கோடியே 3. முத்து மயமாயிலங்கும் பட்டணமது நமது முன்னோரெல்லாம் போயிருக்கும் பட்டணமது 4. ஜீவநதி பாயுகின்ற பட்டணமது – நிதம் சித்திரமுடனிலங்கும் பட்டணமது 5. நாமெல்லோரும் நாடுகின்ற பட்டணமது – நமது நாதரேசு வீற்றிருக்கும் பட்டணமது 6. சாவு துக்கமேயில்லாத பட்டணமது – நிதம் சங்கீதமுடனிலங்கும் பட்டணமது

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3464
Song ID
maatchi-meeku-mocha-nagar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0