Maatuthozhuvam மாட்டுத் தொழுவமே சத்திரத்து

மாட்டுத் தொழுவமே சத்திரத்து
Unknown
PPT
Lyrics

Lyrics

மாட்டுத் தொழுவமே சத்திரத்து (பெத்லகேம் ) மாட்டுத் தொழுவமே இயேசு உன்னிடத்தில் பிறந்ததால் உனக்கு பெருமையோ 1. தேவாதி தேவன் வானகம் விட்டு தொழுவம் என்னிலே பாலகனாக தோன்றியது எனக்கு பெருமையே இன்ப நாள் அந்த நாள் என் வாழ்விலே பொன்னான நாள் இயேசு என்னில் பிறந்ததால் எனக்கு பெருமை தான் 2. கானக மேய்ப்பர் செய்தியை கேட்டு வந்து பணிந்தார் வானக சாஸ்திரி மூவர் வந்து தொழுது மகிழ்ந்தார் மா தவம் செய்தேனோ என்னுள்ளம் பொங்கிடுதே மன்னவர் என்னில் பிறந்ததால் எனக்கு பெருமை தான் 3. என்னில் பிறந்த இயேசு பாலன் உங்கள் உள்ளத்தில் இன்று பிறக்க வேண்டுமென்று பணிந்து கேட்கிறேன் வாருங்கள் தாருங்கள் இதயத்தை இயேசுவுக்கு வாழ்நாளெல்லாம் அவருடன் மகிழ்ந்திருக்கலாம் மாட்டுத்தொழுவமே பெத்தலகேம் மாட்டுத்தொழுவமே எங்கள் உள்ளங்களை இயேசுவுக்கு கொடுத்து விட்டோமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7542
Song ID
maatuthozhuvam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open