Magimai Mel Magimai மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன்
மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன்
Lyrics
மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன்
மறுரூபமாவேன் மனமதிலே
மகிழ்ந்திடவே தரிசிக்கவே பரன் முகமே
உந்தன் பாதம் என்னை பலியாய்
உண்மை மனதுடன் ஒப்படைத்தேன்
ஏற்றுக் கொண்டருளும்
தேவ பெலன் விளங்கும் தேற்றி
உயிர்ப்பித்திடும் தம் ஆவியினால்
தேவ சாயல் தேவ சமுகம் தேவபிள்ளைகள்
அடையும் பாக்கியம் எந்தன்
வாஞ்சையிதே என்று சேர்ந்திடுவேன்
என்னை நிரப்பிடுமே தம் ஆவியினால்
ஜீவ ஜலமே பொங்கி வருதே
ஜீவ ஊற்றுகள் திறந்தனவே தம்
கரம் பிடித்தேன் அங்கு வழி நடத்தும்
தாகம் தீர்த்திடுவேன் தம் ஆவியினால்
பாதம் ஒன்றே போதும் என்றேன்
பேசும் ஆண்டவர் தொனியும் கேட்டேன்
இன்ப வாக்குகளே எந்தன் போஜனமே
என்னை பெலப்படுத்தும் தம் ஆவியினால்
திவ்ய குணங்கள் நாடி ஜெபித்தேன்
தூய வாழ்க்கையின் தேவை அதுவே
தேவ சேவையிலே பாடு சகித்திடவே
தாரும் பொறுமை பெலன் தம் ஆவியினால்
ஆவி ஆத்மா தேகம் முழுதும்
அன்பர் இயேசுவின் சொந்தமாமே
பூரணம் அருளும் ஆயத்தபடுத்தும்
பாடிப் பறந்திடுவேன் தம் ஆவியினால்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 834
- Song ID
- magimai-mel-magimai
- Views
- 12
- Downloads
- 1