Manamae Nee Yen Veennaay மனமே நீ ஏன் விணாய் சிந்திக்கிறாய்
மனமே நீ ஏன் விணாய் சிந்திக்கிறாய்
Lyrics
மனமே நீ ஏன் விணாய் சிந்திக்கிறாய்
வீணாய் கவலை கொள்வதனால்
அதனால் உனக்கும் லாபம் என்ன
ஒரு முழம் கூட்ட முடியுமோ
1. உலகோர் உன்னை வெறுத்திட்டாலும்
வெறுத்திடா தேவன் உனக்குண்டு
உண்மையாய் நேசிக்கும் இயேசுவைப் பார்
உன்னதர் இயேசு உன் துணையே
2. உன்னை விசாரிக்க யாருமில்லை
என்று எண்ணி ஏங்குகிறாய்
உன்னை விசாரிக்கும் இயேசுவைப் பார்
தாயினும் மேலாய் நடத்திடுவார்
3. பறக்கும் பறவையை கவனித்துப் பார்
விதைக்கவில்லை அறுக்கவில்லை
அவைகளை போஷிக்கும் இயேசுவைப் பார்
உன்னையும் போஷித்து நடத்திடுவார்
Details
- Numeric ID
- 8180
- Song ID
- manamae-nee-yen-veennaay-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open