Mannaathi Mannan Yesu மன்னாதி மன்னன் இயேசு தாமே
மன்னாதி மன்னன் இயேசு தாமே
Lyrics
மன்னாதி மன்னன் இயேசு தாமே
மான்களை தினமிதில்
வான தூத சேனையுடன்
வந்தனர் அல்லேலூயா
1. தம் திரு நாமத்தில் கூடும்போது
தவறாமல் வருவேன் என்றுரை செய்தவர்
வாக்கு மாறாதவரே
இன்று வல்ல நல் ஆசீர்வாதம்
அருள் மாறி பொழிய
2. கானாவூர் கல்யாண வேளையிலே
கர்த்தாதி கர்த்தர் அற்புத கரம் நீட்டிடவே
குறைகள் யாவும் நீங்கிடவே
இன்றுமே அவ்வல்லமை விழுங்க
3. கர்த்தர் இயேசுவுக்காக ஒத்த மிக
கற்புள்ள கன்னிகையாம் சபையை
கறை திரை பற்றாதே
காக்கும் கரத்தில் மறைத்திடவே
மணமக்கள் இருவரையும்
4. மணவாளன் இயேசு தன் தூதரோடயே
மகிமையில் தோன்றிடும் நாளுக்கொன்றாய்
உத்தம சாட்சிகளாய்
மணமக்கள் உம்மில் நிலைத்திடவே
வழுவாமல் காத்திடுமே
Details
- Numeric ID
- 4759
- Song ID
- mannaathi-mannan-yesu-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open