Mannavarae Mannavarae மன்னவரே மண்ணுலகை காத்தவரே
மன்னவரே மண்ணுலகை காத்தவரே
Lyrics
மன்னவரே (2) மண்ணுலகை காத்தவரே
நல்லவரே நாடு போற்றும் வல்லவரே
ஆறு குளம் வற்றிப்போகும்
பாசம் மட்டும் வற்றாது
இயேசு ராசா அன்புக்கு தான்
ஈடு இணை இங்கேது ஓஹோ
1. எம்மனசு உம்மைக் கண்டு
ஏக்கம் கொண்டதே - எல்லையில்லா
அன்பினாலே உள்ளம் பொங்குதே
நாடிவரும் எல்லோருக்கும்
நன்மையுள்ளதே - எங்கள் இயேசு ராசா
உங்கள் கருணையுள்ளதே
ஆசையாய் பாசத்துடன்
அணைத்துக் கொள்வார் - ஆறுதலாய்
தேற்றி உன்னைக் காத்துக் கொள்வார்
ஜெயம் ஜெயமே இது நிஜமே ஓஹோ...
2.காத்தடிச்சு கட்டமரம் ஆட்டம் கண்டதே
கட்டளைகள் இட்டார் இயேசு
காற்றும் நின்றதே
நீரடிச்சு நீர் வழியும் கொள்வதில்லையே
நேர்வழியில் நடந்தால் இங்கு
தொல்லையில்லையே
மேகங்கள் மழைநீரை தாங்கி செல்லும்
இயேசுவின் அன்பு நம்மைக்
காத்துக் கொள்ளும்
' திகையாதே தவிக்காதே ஓஹோ...
Details
- Numeric ID
- 7534
- Song ID
- mannavarae-mannavarae-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open