Marana Pallathakil Nadanthalum மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்
மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்
Lyrics
மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன்
தேவரீர் என்னோடு இருக்கிறீர்
என்னை விட்டு நீர் விலகுவதில்லை
என்னை நீர் கைவிடுவதில்லை
உம்மால் நான் என்றும் மறக்கப்படுவதில்லை
உந்தன் மனதில் இருப்பவன் நானே
உந்தன் உள்ளங்கையில் நானே
உந்தன் கண்ணின் கண்மணி நானே
ஓடிப்போய் ஒழிய கோழை நான் அல்ல
பயந்து நடுங்க பெலவீனன் அல்ல
உடன்படிக்கையை உடைய ராஜா நானே
உம்மால் நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
எந்த மதிலையும் துதித்து தாண்டுவேன்
வெண்கல வில்லையும் முறிப்பேன்
எனக்காய் யுத்தம் செய்பவர் என்னோடே
ராஜாதி ராஜா என்னோடே
சேனைகளின் கர்த்தர் என்றும் என்னோடே
விழுந்த என்னை தூக்கி நிறுத்தினீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்
உந்தன் கிருபை வியக்கும் கிருபையே
தகுதி இல்லா என்மேல் உந்தன் இரக்கம்
தகுதி இல்லா என்மேல் உந்தன் உருக்கம்
அதுவே என்மேல் இருக்கும் உந்தன் கிருபை
தகுதி இல்லா என்மேல் உந்தன் தயவு
தகுதி இல்லா என்மேல் உந்தன் பரிவு
அதுவே என் மேல் இருக்கும் உந்தன் கிருபை
Details
- Numeric ID
- 8222
- Song ID
- marana-pallathakil-nadanthalum-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open