Maranam Ennai Nerugkinaalum மரணம் என்னை நெருங்கினாலும்

மரணம் என்னை நெருங்கினாலும்
Unknown
Lyrics

Lyrics

மரணம் என்னை நெருங்கினாலும் மன்னவர் என் அருகிலே பாதாளம் என்னை சூழ்ந்தாலும் பரிசுத்தர் என் நடுவிலே – 2 மரணமே உன் கூர் எங்கே பாதாளமே உன் ஜெயம் எங்கே ஜெயிப்பேன் இயேசுவின் நாமத்தினால் ஜெயிப்பேன் இயேசுவின் இரத்தத்தினால் 1. மரண திகில் என்னை சூழும் நேரம் மாறாதவர் நீர் என் அருகிலே – 2 மனுஷகுமாரனாய் இறங்கிவந்து என் பாவங்களை மன்னித்தீர் மறுபடியும் சமூகத்திலே என்னை சேர்த்துக் கொள்வேன் என்றீரே 2. பயங்கள் என்னை பற்றும் நேரம் பரனே என் பக்கத்திலே – 2 சாபங்களை நீக்கிட சிலுவையை சுமந்தீரே – 2 சரித்திர நாயகனாய் இன்றும் வீற்றிருக்கின்றீர் 3. காரிருள் என்னை மிரட்டும் நேரம் இயேசுவே என் அருகிலே – 2 இரத்தம் சிந்தி சாத்தானின் தலையை நீர் நசுக்கினீர் – 2 இருளாய் இருந்த என் வாழ்வை வெளிச்சமாய் மாற்றினீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
322
Song ID
maranam-ennai-nerugkinaalum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0