Maranathai Vendru மரணத்தை வென்ற எங்கள் தேவனே
மரணத்தை வென்ற எங்கள் தேவனே
Lyrics
மரணத்தை வென்ற எங்கள் தேவனே
உயிர்த்தெழுந்த இயேசு இராஜனே-2
பாதாளமோ மரணமோ
தடுத்து நிறுத்த முடியவில்லையே-2
உயிர்த்தெழுந்தாரே மீட்பர் உயிர்த்தெழுந்தாரே
இன்றும் ஜீவிக்கின்றார்
உயிர்த்தெழுந்தாரே இயேசு ஜெயித்தெழுந்தாரே
இன்றும் ஜீவிக்கின்றார்-(2)
1.பிதாவின் ஏக சுதன் ஆனவர்
தம்மையே நமக்காக தந்தவர்-2
அனைத்திலும் அதிகாரமுள்ளவர்
சாவாலே மரணத்தை ஜெயித்தவர்-2
2.சிலுவையின் மீது வெற்றி சிறந்தவர்
சீர் பொருந்த எம்மை செய்தவர்-2
சிங்காசனம் விட்டிறங்கி வந்தவர்
நம்மையே சொந்தமாக்கி கொண்டவர்-2
3.உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை
மரித்தோர் மத்தியில் தேட முடியுமோ?-2
சொன்னபடி உயிர்த்தெழுந்தார்
கல்லறையில் இயேசு இல்லையே-2
Details
- Numeric ID
- 1951
- Song ID
- maranathai-vendru-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1