Maranathai Vendru Nethiya Jeevan மரணத்தை வென்று நித்திய ஜீவன்
மரணத்தை வென்று நித்திய ஜீவன்
Lyrics
மரணத்தை வென்று நித்திய ஜீவன்
நமக்கென்று தந்தார் சர்வ வல்ல தேவன்
என்றும் போற்றிடுவோம்
என்றும் பணிந்திடுவோம்
உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார்
மரணத்தின் கூரை ஒடித்தார்
உயிர்த்தெழுந்தார் ஜெயித்தெழுந்தார்
சிலுவையில் யாவையும் முடித்தார்
1.கிறிஸ்துவை உடையவன்
ஜீவனை உடையவன்
கிறிஸ்துவை இழந்தவன்
ஜீவனை இழந்தவன்
கிறிஸ்துவை எங்களில் உதயமாகச் செய்த
தேவா உமக்கு நன்றி
ஜீவனைத் தந்திட பூவினில் இல்லை
யாரும் உம்மையன்றி
தேவா உமக்கு நன்றி
தேவனில்லை உம்மையன்றி -2
2. கிறிஸ்துவே ஜீவனும்
தேவனும் நமக்கானவர்
கிறிஸ்துவே மகிமையும்
நீதியும் நமக்கானவர்
நீதியை உம்மில் அடைந்திடச் செய்த
தேவா உமக்கு நன்றி
மகிமையில் எங்களைக்
கொண்டுச் சேர்த்திட
வழியில்லை உம்மையன்றி
தேவா உமக்கு நன்றி
வழியில்லை உம்மையன்றி -2
Details
- Numeric ID
- 7337
- Song ID
- maranathai-vendru-nethiya-jeevan-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open