Maravaamal Ninaitheeraiya Manathaara
மறவாமல் நினைத்தீரையா
Lyrics
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன் - 2
இரவும் பகலும் என்னை நினைத்து
இதுவரை நடத்தினீரே
நன்றி நன்றி ஐயா ஆ ஆ...
கோடி கோடி நன்றி ஐயா
1. எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே - 2
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன் - 2
2. பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா - 2
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே - 2
3. தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே - 2
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே - 2
Details
- Numeric ID
- 7037
- Song ID
- maravaamal-ninaitheeraiya
- Views
- 0
- Downloads
- 0