Mariyen Maganaai மரியின் மகனாய் மாந்தர்
மரியின் மகனாய் மாந்தர்
Lyrics
மரியின் மகனாய் மாந்தர் துயர் போக்கவே
மாதேவன் இயேசு உலகில் மனு உருவெடுத்தார்-2
விண்ணவர் பாடவே மன்னவர் போற்றவே
உன்னத தேவசுதன் உலகில் வந்தாரே-2-மரியின்
1.இழந்து போனதை தேடவும் மீட்கவுமே
தேவகுமாரன் இந்த உலகில் வந்தாரே-2
தீராத பாவங்களை தீர்க்கவே
பலியான தேவ ஆட்டுக்குட்டியும் அவரே-2-மரியின்
2.மாந்தர் யாவருக்கும் மிகுந்த சந்தோஷம் இதுவே
மீட்பர் இயேசு பெத்லகேமில் பிறந்த செய்தியே-2
அவரே நம் சமாதான காரணர்
நம் சாபம் போக்க வந்த தேவ குமாரன்-2-மரியின்
Details
- Numeric ID
- 1954
- Song ID
- mariyen-maganaai-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1