Lyrics
மறுரூபம் மறுரூபம் மறுரூபமே
மகிமையானதோர்அனுபவமே
மாம்ச சாயல் முற்றும் மாறிடுமே
மகிபனின் சாயல் வந்திடுமே
எங்கள் தேவனே இயேசு ராஜனே
என்னை ஆட்கொண்டே தெய்வமே
இந்த நாளிலே இந்த வேளையிலே
என்னை மறுரூபமாக்கிட வாருமோ
எழுப்புதல் மேகம் எழும்ப செய்வது
கருத்தான ஜெபத்தின் மறுரூபம்
ஆத்தும பாரத்தால் மன்றாடி ஜெபிப்பது
உத்தம கிறிஸ்தவனின் மறுரூபம்
2. சங்கீதங்கள் பாடி உணர்வுள்ள உள்ளத்தால்
ஆவியில் நிறைவது மறுரூபம் !
சமயம் வாய்த்தாலும் வாய்க்காமல்
போனாலும் சாட்சி பகிர்வது மறுரூபம்
3. சின்னஞ்சிறு தவறோ ரகசிய பாவமோ
செய்யாமல் இருப்பது மறுரூபம்
சிந்தனையில் பரிசுத்தம் காத்துக் கொள்வதே
தனிப்பட்ட வாழ்வின் மறுரூபம்
4. காண்போர் வியந்திட அனுதின வாழ்வில்
அன்பினை காட்டுவது மறுரூபம்
துரோகம் செய்தவனை சிநேகிதன்
என்பது சமுதாயம் போற்றும் மறுரூபம்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 7338
- Song ID
- maruroobam-maruroobam-maruroobam-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 0