MATCHIMAIYAANA THOR மாட்சிமையானதோர் காட்சியை

மாட்சிமையானதோர் காட்சியை

Lyrics

மாட்சிமையானதோர் காட்சியைப் பார்க்கலாம் வா ஆ கல் வாரிச் சிலுவையில் வானவன் தொங்கின்ற மாட்சிமையானதோர் காட்சியைப் பார்க்கலாம் வா சூட்சமுறுங் தேவ சாட்சியாங் கற்பனை துய்யத்தை நரர் மீறி – மகா துர்க்குணப் பேயின் தந்திரத்தினால் தூய்மை விட்டனர், வாய்மை கெட்டனர் சுத்த கிறிஸ்தரசன் – தேவனுட சித்தன், அமை சிரசன், மாந்தர்களின் துன்பத்தைப் போக்கவும், இன்பத்தைச் சேர்க்கவும் தோஷஞ் செய்பாதகன் வேஷமாய்த் தொங்கின்ற எருசலை நகர் மருவுங் கல்வாரி என்னப்பட்ட ஒரு மேடு – அதில் ஏசுக்கிறிஸ் தெனும் நேசமகத்துவன் எங்களுக்காய்ப் படும் பாடு – மரக் குருசில் ஏறியே சிரசில் முண்முடி கொண்டதும் நொந்ததும் நீடு – அப்போ கொற்றவன் தன்முகம் சற்றேனுங் காட்டாத குறையதும் ஒரு பீடு குருதி வடியவே, சுருதி முடியவே பருதி மறையவே, திரையுங் கிழியவே கொலைஞர் அவமதிக்க – துஷ்டனாம் அலகை மனங்கொதிக்க, கசப்புடன் கோனே, என்னை நீர் ஏனோ கைவிட்டீர் கொடுக்கிறேன் ஜீவனை, எடுத்திடு மென்றழும் பூலோகத்தாரே இம்மேலான காட்சியின் புண்ணியத்தை வந்து பாரும் – தேவ புத்திரன் பக்கத்தில் குத்துண்டு பாய்கின்ற புனித ரத்தமும் நீரும் – நமை மேலோகஞ் சேர்க்கின்ற சாலக்கிருபையின் விஸ்தார ஊற்றென்று சேரும் அதில் விழுந்து ஆத்துமம் முழுகிப் பாவந் தீ வினை அகன்றிட வாரும் சீலமற்ற மாந்தர் கோல முற்ற வேந்தர் ஜீவனாதிபதி சாவினாலே நம்மைத் தெய்வ லோகஞ் சேர்க்க – நித்தியமாய் உய்யும் சுத்தோராக்கத் தேவசுதன் செல்வக் கிறிஸ்தந்தக் கல்வாரி மேட்டினில் ஜீவன் துடிக்கத்தம் ஆவி விடுகின்ற- மாட்சி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6858
Song ID
matchimaiyaana-thor-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0