Mayangum Dhasanai பாமாலை: 325 மயங்கும் தாசனை

மயங்கும் தாசனை

Lyrics

1.மயங்கும் தாசனை நாதா, நீர் நடத்தும்; என் பாதைகாட்டியாய் சகாயம் புரியும். 2.நீர் காட்டும் பாதைதான் எப்போதும் நல்லதே; சுற்று, நேர் ஆயினும் விண் வீடு சேர்க்குமே. 3.என் சித்தம் ஆபத்தாம், உம் சித்தம் நாடுவேன்; நான் செல்லும் பாதையை நீர் காட்டக் கெஞ்சுவேன். 4.நான் தேடும் ராஜியம் உம் சொந்தமானதே; அங்கென்னைச் சேர்த்திடும் பாதையும் உம்மதே. 5.உம் சித்தம்போல நீர் என் பாத்திரம் எடுத்தும் சந்தோஷம், சஞ்சலம், ஏதாலும் நிரப்பும். 6.வியாதி, சுகமோ, இஷ்டர், பகைஞரோ, வறுமை, செல்வமோ, சிறிதோ, பெரிதோ. 7.என் இஷ்டம் எதிலும் வேண்டாம்; என் நாதரே, என் வழிகாட்டியாம் நீர் சர்வ ஞானரே.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4953
Song ID
mayangum-dhasanai-chords-ppt
Views
1
Downloads
1