MAZHIL MAZHIL MANTHAYAE மகிழ், மகிழ், மந்தையே, நீ; அல்லேலூயா! பரன்

மகிழ், மகிழ், மந்தையே, நீ; அல்லேலூயா! பரன்

Lyrics

மகிழ், மகிழ், மந்தையே, நீ; அல்லேலூயா! பரன் மைந்தன் பரமேறினார், அல்லேலூயா! மகிழ், மகிழ்; பரன் மைந்தன் மகத்துவ பரமேறினார்; திகழ் திருச்சேனை பாடும் அல்லேலூயா, இன்று. வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லா வானங்கள் மேலேறினார், அல்லேலூயா! தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார், ஞானமுடன் பாடுங்கள், அல்லேலூயா, இன்று ஏசுபரன் நமக்கு இறையானார்; இது எல்லாவர்க்குஞ் சந்தோஷம், அல்லேலூயா! வாசம் நாம் செய்யத் தந்தை வளவில் இடம்பிடித்த நேசமுன்னத நேசம், அல்லேலூயா, இன்று தந்தை வலப்பாகத்தில் சத்திய கிறிஸ்து எங்கள் சத்துருக்கள் மேற்சிறந்தார், அல்லேலூயா! சொந்தக் காயங்கள் காட்டிச் சுகிர்தமுடன் ஜெபிப்பார்; மந்தையே, உந்தனுக்காய் அல்லேலூயா, இன்று மோட்ச சுதந்தரர் நாம் வானோருக்கும் ஒப்பர், முடிவில்லாப் பாக்கியர் நாம், அல்லேலூயா! பாழ்ஜெகம் நிலையல்ல, பரம சஞ்சாரிகள் நாம் சூட்சுமக் கர்த்தனுக்கே அல்லேலூயா, இன்று பூதலமந்தமட்டும் உங்களுடனே நித்தம் புனிதன் இருப்பேனென்றார்; அல்லேலூயா! ஏதெமக்குக் குறைச்சல் ஏசெங்களோடிருந்தால், யாதுமோசந்தொடரும்? அல்லேலூயா, இன்று

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6865
Song ID
mazhil-mazhil-manthayae-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0