Mega Meethil Yesu Rajan Vegam Vaararae மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே

மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே
Unknown
PPT
Lyrics

Lyrics

மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே! ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க அவரே வாறாரே! 1. ஆண்டவர்தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாறாரே! மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார் 2. கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம் கிளம்பியே எழும்பிடுவார் மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே 3. பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே பாடு பட்டவர் தாமே கூடும் நமக்கோ குறைவில்லா பலனை கூவியே கொடுத்திடுவார் 4. அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கின்றதே! அவர் வரும் வேளையை எவருமே அறியார் ஆண்டவரே அறிவார் 5. ஆயிர வருஷ ஆளுகை செய்வார் ஆண்டவர் இயேசுதாமே! நீதி சமாதானம் நிறைந்தே இருக்கும் ஜோதியின் ஆளுகையில் 6. அல்லேலூயா கீதம் பாடி அகமகிழ்ந்திடுவோமே வல்லவர் வரும் வேளையுமிதோ மெல்லவே நெருங்கிடுதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3877
Song ID
mega-meethil-yesu-rajan-vegam-vaararae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open