Naan Bayapadum Nalilae நான் பயப்படும் நாளிலே உம்மை

நான் பயப்படும் நாளிலே உம்மை
Unknown
Lyrics

Lyrics

நான் பயப்படும் நாளிலே உம்மை நம்புவேன் கலங்கிடும் நாளிலே உம்மையே நம்புவேன்-2 கர்த்தர் என் சகாயர்-3 நான் பயப்படேன்-2 1.கர்த்தர் எனக்காய் யுத்தங்களை செய்வார் நான் அமர்ந்திருப்பேனே எனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதம் வாய்க்காமலே போகும்-2 மந்திரமோ சூனியமோ சர்ப்பங்களோ தேள்களோ மரணமோ சேதங்களோ அசைக்கவே முடியாதே-2 கர்த்தர் என் சகாயர்-3 நான் பயப்படேன்-2 2.கர்த்தர் என் விளக்கை எரிய செய்வீர் நான் எரிந்து கொண்டிருப்பேன் நான் மலையின் மேலுள்ள பட்டணமாக எரிந்து பிரகாசிப்பேன்-2 யார் என்ன சொன்னாலும் யார் என்னை தடுத்தாலும் யார் என்னை பகைத்தாலும் அசைக்கவே முடியாது-2 கர்த்தர் என் சகாயர்-3 நான் பயப்படேன்-2 3.கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடித்திடுவாரே நான் முன்னேறி செல்வேன் கெம்பீரமாகவே இயேசுவின் நாமத்திலே-2 தடைகளோ தாமதமோ கஷ்டமோ நஷ்டமோ கண்ணீரோ காயங்களோ அசைக்கவே முடியாது-2 கர்த்தர் என் சகாயர்-3 நான் பயப்படேன்-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3597
Song ID
naan-bayapadum-nalilae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0