Naan Mannippadaiya NeerLyrics Song நான் மன்னிப்படைய நீர்
நான் மன்னிப்படைய நீர்
Lyrics
நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்
மீட்படைய நொறுக்கப்பட்டீர் – 2
நீதிமானாக்க பலியானீர்
நித்திய ஜீவன் தந்தீர் – 2
அன்பே பேரன்பே
1. காயப்பட்டீர் நான் சுகமாக
என் நோய்கள் நீங்கியதே – 2
சுமந்து கொண்டீர் என் பாடுகள்
சுகமானேன் தழும்புகளால் – 2
இம்மானுவேல் இயேசு ராஜா
இவ்வளவாய் அன்புகூர்ந்தீர் – 2
2. சாபமானீர் என் சாபம் நீங்க
மீட்டீரே சாபத்தினின்று – 2
ஆபிரக்காமின் ஆசிர்வாதங்கள்
பெற்றுக்கொண்டேன் சிலுவையினால் – 2
3. ஏழ்மையானீர் சிலுவையிலே
செல்வந்தனாய் நான் வாழ – 2
பிதா என்னை ஏற்றுக்கொள்ள
புறக்கணிக்கப்பட்டீரையா – 2
4. மகிமையிலே நான் பங்கு பெற
அவமானம் அடைந்தீரையா – 2
ஜீவன் பெற சாவை அடைந்தீரையா
முடிவில்லா வாழ்வு தந்தீர் – 2
Details
- Numeric ID
- 7666
- Song ID
- naan-mannippadaiya
- Views
- 0
- Downloads
- 0