Naan Nirpathum Nirmulam Kartharin நான் நிற்பதும் நீர்மூலமாகாததும் கர்த்தரின்
நான் நிற்பதும் நீர்மூலமாகாததும் கர்த்தரின்
Unknown
Lyrics
Lyrics
நான் நிற்பதும் நீர்மூலமாகாததும்
கர்த்தரின் சுத்த கிருபை - நான்
நடப்பதும் நலமுடன் வாழ்வதும்
ஆண்டவர் என் மேலே வைத்த கிருபை
கிருபையே தேவ கிருபையே!!
கிருபையே! மாறா கிருபையே !!
1. அலைகள் புரண்டுவந்து அடித்து
சேதப்படுத்தினும்-கடல்மேல்
நடந்து வந்து காத்த கிருபை
உடல்கள் சிதறி அங்கு
உருவிழந்த போதிலும்
உயிராய் நடமாட உதவும் கிருபை
2. தனிமையில் வெறுமையாய் நான்
தவித்து ஏங்கி நிற்கையில்-இனிமையாய்
வார்த்தை பேசி அணைத்த கிருபை
கன்மலை வெடிப்பினிலே மறைவாய்
வைத்து எனை-மன்னாவால்
போஷித்த நேச கிருபை
3. தாய் தன் பாலகனை மறந்தாலும்
மறந்திடுவாள் - மறவாமல் காக்கும்
அவர் அன்பு கிருபை
தாவியே ஓடிவந்து தகப்பனை போல் சுமந்து
தோளினில் தூக்கும் அந்த பாச கிருபை
Details
- Numeric ID
- 2574
- Song ID
- naan-nirpathum-nirmulam-kartharin-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0