Naan Paavithan Aanalum Neer Song பாமாலை…

நான் பாவிதான் ஆனாலும் நீர்

Lyrics

1. நான் பாவிதான் – ஆனாலும் நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர்; வா என்று என்னை அழைத்தீர் என் மீட்பரே, வந்தேன். 2. நான் பாவிதான் – என் நெஞ்சிலே கறை பிடித்துக் கெட்டேனே என் கறை நீங்க இப்போதே, என் மீட்பரே, வந்தேன். 3. நான் பாவிதான் – மா பயத்தால் திகைத்து, பாவபாரத்தால் அமிழ்ந்து மாண்டு போவதால், என் மீட்பரே, வந்தேன். 4. நான் பாவிதான் – மெய்யாயினும் சீர், நேர்மை, செல்வம், மோட்சமும் அடைவதற்கு உம்மிடம் என் மீட்பரே, வந்தேன். 5. நான் பாவிதான் – இரங்குவீர் அணைத்து, காத்து, ரட்சிப்பீர், அருளாம் செல்வம் அளிப்பீர்; என் மீட்பரே, வந்தேன். 6. நான் பாவிதான் – அன்பாக நீர் நீங்கா தடைகள் நீக்கினீர்; உமக்கு சொந்தம் ஆக்கினீர்; என் மீட்பரே, வந்தேன்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4994
Song ID
naan-paavithan-aanalum-neer-song-chords-ppt
Views
1
Downloads
1