Lyrics
நான் பாடுவேன் உம்மை என்றுமே
நான் போற்றுவேன் உம்மை என்றுமே – 2
தேவனே என் ஜீவனே
தேடி வந்த என் தெய்வமே – 2
ஆராதனை என்றும் உமக்கே
ஆராதனை என்றும் உமக்கே
ஆராதனை என்றும் உமக்கே
ஆராதனை என்றும் உமக்கே – 4
1. உயிருள்ள நாளெல்லாம் பாடுவேன்
முழு மனதால் உம்மை நேசிப்பேன் – 2
தாழ்மையிலே என்னை நினைத்தவரே
தாங்கி நடத்தும் என் இயேசுவே – 2
2. பெலவீன நேரம் பெலன் தந்தீர்
கிருபையினால் தினம் தாங்கினீர் – 2
கண்மணி போல் என்னைக் காப்பவரே
காலமெல்லாம் உம் புகழ் பாடுவேன் – 2
3. நீர் செய்த நன்மைகள் நினைக்கையிலே
உம் அன்பால் உள்ளம் பொங்குதே – 2
இதயமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே
மகிழ்வுடனே உம் துதி பாடுவேன் – 2
Details
- Numeric ID
- 3593
- Song ID
- naan-paduven-ummai-endrume-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0