Lyrics
நல்லவரே நம் கர்த்தரே முன்
செல்லும் கர்த்தாதி கர்த்தரே
வல்லவரின் எல்லை இல்லா கிருபை
தொடர்ந்து வரும் நித்தமே
1. உந்தன் தஞ்சம் வேண்டி ஒன்று கூடி நின்றோம்
எங்கள் ஆண்டவரே கர்த்தரே
எதிர் வரும் பகை அதிர்ந்தோடும் பெரும்
இரட்சிப்பை நாம் காண்போம்
கர்த்தரை தேசம் பற்றிக் கொள்ள
சத்துருக்கள் வரும் அந்நேரமே
பக்தியாய் பணிந்து நாம் தொழுவோம்
தேவன் நல்லவர் வல்லவரே
2. கர்த்தர் தந்த வார்த்தை பெற்ற மக்களாக
நித்தம் நம் மேன்நிலை பெறுவோம்
தீர்க்க தீர்க்க தரிசனங்கள் நம்பி
சித்தி பெற்றே வளம் பெறுவோம்
கர்த்தரின் மகத்துவத்தை பாடி
துதி பேறு உயர்த்திப் கூறவே
பக்தர் நல் சேனை முன் சென்று
வெற்றியின் தொனியை நாம் எழுப்புவோம்
3. இந்த யுத்தம் உங்கள் யுத்தம் அல்ல என்று
பரிசுத்த தேவன் வாக்கு கேட்டு நாம்
கர்த்தரின் நல் மீட்பினை காண்போம்
திடம் கொள்வோம் ஜெயம் பெறுவோம்
பகைவர் கூட்டம் கண்டு அஞ்சிடாமல்
பரிசுத்தரை பணிந்து தொழுவோம்
பெரு முழுக்கத்தோடு நாம் முன்னேறி
பரம தேவனை துதித்து பாடுவோம்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 8135
- Song ID
- nallavarae-nam-karththarae-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 0