Namakkoru Thagappan Undu Song நமக்கொரு தகப்பன் உண்டு
நமக்கொரு தகப்பன் உண்டு
Lyrics
நமக்கொரு தகப்பன் உண்டு
அவரே நம் தெய்வம்
எல்லாமே அவரிலிருந்து வந்தன
நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்
திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பன் இவர்
தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்
உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்
அப்பா… அப்பா…
தகப்பனே என்று கூப்பிடுவோம்
ஆட்கொண்டு நடத்துகிறார்
அதிசயமாய்உருவாக்கி மகிழ்கின்றார்
ஒவ்வொரு நாளும் கேட்பதைக் கொடுத்திடுவார்
தட்டும்போது திறந்திடுவார்
இரக்கம் நிறைந்த தந்தை அவர்
ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்
கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் அவர் தானே
குழந்தையாய் இருக்கும் போதே நேசித்தவர்
எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டார்
கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப்பழக்குகிறார்
அன்புக் கரங்களால் அணைத்துக் கொண்டார்
பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக் கொண்டார்
நுகத்தை அகற்றி விட்டார்
ஜெயத்தைத் தந்து விட்டார்
Details
- Numeric ID
- 7718
- Song ID
- namakkoru-thagappan-undu
- Views
- 1
- Downloads
- 1