Namba Vendam Namba Vendam நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம்

நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம்
Unknown
Lyrics

Lyrics

1. நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம் பொய்யுலகை நம்ப வேண்டாம்; நேசங் காட்டித் துரோகஞ் செய்யும் பாழுலகை நம்ப வேண்டாம் 2. உன்னை பெற்ற மாதாவெங்கே? போஷித்த உன் தந்தையெங்கே? போய்விட்டாரோ போய்விட்டாரோ உன்னை விட்டுப் போய்விட்டாரோ? 3. திருடனைப் போல சாவு வரும் திடுக்கிடுவாய் நீயும் அப்போ; பாம்பின் வாயில் தவளை போலே பரிதபிப்பாய்! பரிதபிப்பாய்! 4. பிரேதமாகப் பாவி யுன்னை தூக்கிப் போடுவார் கல்லறைக்கு; அங்கே உன்னை வைத்திடுவார் நம்புவாயோ உலகைப் பின்னும்? 5. இயேசு நாதர் பாதந்தேடும்; மீட்பை இன்றே பெற்றுக்கொள்ளும் குருசில் தொங்கும் நேசர் பாரும் குணமாக்குவார் இப்போ வாரும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3674
Song ID
namba-vendam-namba-vendam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0