Nambinen Song நம்பினேன் உன தடிமை நான் ஐயா

நம்பினேன் உன தடிமை நான் ஐயா

Lyrics

நம்பினேன் உன தடிமை நான் ஐயா திடப்படுத்தி என்றனை நடத்திக் காப்ப துன் கடமை தான் ஐயா உம்பரும் புவி நண்பரும் மற்ற உயிர்களும் பல பொருள்களும் தொழும் தம்பிரானே மெய் யம்பராபரா தாசன் மீது நன் னேசு அருள் செய் 1.தீதாம் என் பாவம் யாவையும் பொறுத்து,-திருக் கருணையின் அருள் செய்து பின்வரும் இடர்களை அறுத்து, வேதாந்தப்படி என்னைத் தான் வெறுத்து-நான் உனைப்பின் செல்ல, உன் மெய் அருளை என் உள்ளத்தில் நிறுத்து; ஆதாரம் எனக்கார், உனை அன்றி? அம்புவியில் யான் நம்ப வேறுண்டோ?-உன் பாதா தாரத்தில் ஒதுங்கினேன்; எனைப் பாரும், கிருபையைத் தாரும், ஐயனே! 2.என்னைப் படைத்த தேவனும் நீயே;-திரு உதிரத்தைச்சிந்தி ஈடேற்றிக் கொண்ட மீட்பனும் நீயே; இன்னமும் பின்னும் காப்போனும் நீயே;-ஒருபோதும் குன்றிடா இன்பத்தில் வைக்கும் ஜீவனும் நீயே உன்னையன்றி யான் சொன்னவை வேறெ துண்டோ? உந்தன் வாய் விண்டுரை செய்யேன் என் ஐயா, இதை யாவும் சொல்லுமே; ஏழைக்குன் ‘திருத்தாள் அருள் செய்யுமே. 3.சுத்த இருதயத்தினைத் தருவாய்-பரிபூரணானந்த ஜோதி ஆவியின் நல்துணை அருள்வாய், நித்தமும் பய பக்தியைத் தருவாய்;-நான் ஊழியம்செய்ய, நீதனே, எந்தன்முன்எழுந்தருள்வாய்; அத்தனும் அனு கூலனுமான பத்தனே; பரிசித்தனே, உனைப் பாடினேன்; கிருபை சூடி ஆள், ஐயா! – நம்பி 4. ஊக்கமும் மனத்தீர்க்கமும் வேணும்,-சுவிசேஷ உரையை உற்றுப் பார்த்ததில் தேறவும் வேணும்; ஆக்கமும் அன்பர்ச் சேர்க்கையும் வேணும்;-உனக்கூழியம் செய்ய ஆவியும் அதின் ஈவதும் வேணும்? ஏக்கமும் மனக்கவலையும் நித்ய இன்பமுள்ள உன் அன்பின் நல்திரு வாக்கையே நோக்கி இருப்பதால் என்முன் வாரும், கிருபை தாரும், ஐயனே!

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
252
Song ID
nambinen-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
6
Downloads
0
Source
Open