Nan Pogum Vazhithanai நான் போகும் வழிதனை அறிந்தவர் நீர்
நான் போகும் வழிதனை அறிந்தவர் நீர்
Unknown
Lyrics
Lyrics
நான் போகும் வழிதனை அறிந்தவர் நீர்
கால்கள் இடறாமல் காப்பவர் நீர் - 2
எனக்காய் நீர் வைத்த எல்லாமுமே
சிலுவை அன்பினால் செய்து முடித்தீர் - 2
அந்த சிலுவையே சிலுவையே
என் வாழ்வின் திருப்புமுனை - 2
எனக்கு எதிரான கையெழுத்தை
சிலுவை மரத்தில் நீர் ஆணியடித்தீர் - 2
நான் நன்றாய் வாழ என் தலை உயர
உம்மையே எனக்காய் தந்தீரையா - 2
அந்த சிலுவையே சிலுவையே
என் வாழ்வின் திருப்புமுனை - 2
எந்தனின் பாதங்கள் தவறிடும் நேரம்
உந்தனின் கரம் அது மீட்டதையா - 2
என்னையும் நம்பி தந்த கிருபையினால்
உந்தனின் சித்தமதை செய்து முடிப்பேன் - 2
அந்த சிலுவையே சிலுவையே
என் வாழ்வின் திருப்புமுனை - 2
Details
- Numeric ID
- 2585
- Song ID
- nan-pogum-vazhithanai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0