Nan Sirumaium Ellimaium Ahnavan நான் சிறுமையும் எளிமையும் ஆனவன்
நான் சிறுமையும் எளிமையும் ஆனவன்
Lyrics
நான் சிறுமையும் எளிமையும் ஆனவன்
நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே
ஒன்றுக்கும் உதவாத களிமண் நான்
என்னையும் உம் கரம் வணைந்ததே-2
நன்றி சொல்வேன் (என்) வாழ்நாளெல்லாம்
ஆராதிப்பேன் உம்மையே-2
நன்றி நன்றி நன்றி இராஜா-4
1. நீர் செய்த உபகாரங்கள்-அவை எண்ணி முடியாதவை-2
எப்படி நன்றி சொல்வேன் எண்ணில்லா நன்மை செய்தீர்-2
நன்றி நன்றி நன்றி இராஜா-4
2. குப்பையில் கிடந்த என்னை உயர உயர்த்தினீரே-2
எண்ணையினால் தலையை அபிஷேகமும் செய்தீரே-2
நன்றி நன்றி நன்றி இராஜா-4
3. பெலவீனமான என்னை உந்தன் பெலத்தால் இடை கட்டினீர்-2
(என்) வழியை செவ்வைப்படுத்தி சேனைக்குள் பாயச்செய்தீர்-2
நன்றி நன்றி நன்றி இராஜா-4
Details
- Numeric ID
- 1878
- Song ID
- nan-sirumaium-ellimaium-ahnavan-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1