Lyrics
நண்பனே என் நண்பனே - கடந்துவந்த
வழியை நீயும் திரும்பி பாராயோ
இன்று திரும்பி பாராயோ
இன்பத்தில் திளைத்து சுகித்து வாழ்க்கையில்
தன்னிலை ஏன் மறந்தாய் - நீ ஏன்
சுயநலமாய் வாழ்ந்தாய் -2
துன்பத்தில் வாடி துடிதுடிக்கும்
உறவினை மறந்தாய்
உந்தன் சொந்தங்களை மறந்தாய் - 2
1.என்னிடம் எல்லாம் உண்டென்று எண்ணி
அகந்தை கொள்ளாதே (2) நீ இன்று
கொடுத்தது யாரென சற்றும் எண்ணாமல்
பெருமை கொள்ளாதே - இறைவன்
கொடுத்ததை மறவாதே - 2
2. உள்ளது யாவுமே ஒரு நொடியினில்
அழிந்து போலாமே (2) நொடியில்
கொடுத்த இறைவன் எடுக்க நினைத்தால்
தடுக்கலாகுமோ - உன்னால்
தடுக்க முடியுமோ -2
3. இயேசுவால் கிடைத்த நன்மைகளை நீ
எண்ணி துதிப்பாயே (2) இன்றே
உன்னிலும் சிறியேன் உண்டென்று எண்ணி
உதவி செய்வாயே - உள்ளதை
பகிர்ந்து வாழ்வாயே -2
Details
- Numeric ID
- 1026
- Song ID
- nanbane-en-nanbane-kadanthu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0