Nandriyal En Ullam Nirainthiduthey நன்றியால் என்னுள்ளம் நிறைந்திடுதே
நன்றியால் என்னுள்ளம் நிறைந்திடுதே
Lyrics
நன்றியால் என்னுள்ளம் நிறைந்திடுதே
நீர் செய்த நன்மைகள் நினைக்கையிலே- 2
இம்மட்டும் காத்து போஷித்து நடத்தி இம்மானுவேலராய் உடன் இருந்தீர் - 2
பாடுவோம் போற்றுவோம் பாதுகாத்த நல் தயவை
துதிப்போம் புகழுவோம் நடத்தி வந்த கிருபைதனை -2
1. கேளாத ஐஸ்வரியம் கனமும் எல்லாம் நான் தேடும் முன்பே தந்தவரே
வெட்கத்தின் பாதைகள் அனைத்தையுமே புகழ்ச்சியாலே அலங்கரித்தீர் - 2
எனக்காய் நீர் வைத்த எல்லாமுமே ஏற்ற நேரத்தில் தந்து விட்டீர் -2 (பாடுவோம்)
2. எண்ணத்தில் தோன்றாத நன்மைகளும்
என்னையும் தொடர்ந்திட செய்தவரே
எட்டாத உயரத்தில் நிறுத்தி வைத்து
எந்தனின் நிலையை மாற்றினீரே - 2 (பாடுவோம்)
ராஜாக்களோடு அமர செய்து
உயர எழும்பி பறக்க வைத்தீர் - 2
Details
- Numeric ID
- 2904
- Song ID
- nandriyal-en-ullam-nirainthiduthey-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1