Nanmaigalin Nayagane Nanriyudan நன்மைகளின் நாயகனே நன்றியுடன்
நன்மைகளின் நாயகனே நன்றியுடன்
Lyrics
நன்மைகளின் நாயகனே நன்றியுடன்
உம்மை துதிக்கின்றேன்
உமக்குத்தானே ஆராதனை
நன்மைகள் செய்தவரே
உமக்கே ஆராதனை
கலங்கின நேரத்தில் துணையானீர்
திகைத்திடும் வேளையில் பெலனானீர்
இம்மட்டும் துணையானீர்
உமக்கே ஆராதனை
எல்லோரும் கைவிட்ட நேரங்களில்
பயப்படாதே நான் இருப்பேன் என்றீர்
இம்மானுவேல் தேவனே
உமக்கே ஆராதனை
குறை ஒன்றும் இல்லாமல் நடத்தி வந்தீர்
நிறைவான ஆசீர் தினம் அளித்தீர்
தகப்பனாய் இருப்பவரே
உமக்கே ஆராதனை
Details
- Numeric ID
- 5261
- Song ID
- nanmaigalin-nayagane-nanriyudan-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1