Neer Oruvar Mattum Yessuve நீர் ஒருவர் மட்டும் இயேசுவே

நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

நீர் ஒருவர் மட்டும் இயேசுவே என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ? தெய்வீக அன்பால் தானோ? – 2 1. என்னைப் பாடி மகிழ்வித்த புள்ளினங்கள் தங்கள் கூடுகள் தேடிப் பறந்தபின்னும் – 2 நான் வாழ்ந்த காலத்து நண்பர் எல்லாம் நான் தாழ்ந்த காலத்தில் பிரிந்த பின்னும் நீர் ஒருவர் மட்டும் இயேசுவே என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ? தெய்வீக அன்பால் தானோ? 2. எந்தன் மேனி தழுவிய இளந்தென்றல் சொந்த தாய் கடலோடு கலந்த பின்னும் – 2 எந்தன் பாதையின் விளக்காம் பகலவனும் வந்த காரிருள் மாயையால் மறைந்த பின்னும் நீர் ஒருவர் மட்டும் இயேசுவே என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ? தெய்வீக அன்பால் தானோ? – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4120
Song ID
neer-oruvar-mattum-yessuve-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open