Neerae Aadhaaram நீரே ஆதாரம் என்று அறிந்தேன்
நீரே ஆதாரம் என்று அறிந்தேன்
Lyrics
நீரே ஆதாரம் என்று அறிந்தேன்
என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன்
நித்தம் உம் வாக்கை நம்பி நடப்பேன்
நீர் செய்வதெல்லாம் நன்மைக்கென்று
உணர்ந்துகொண்டேன்
தந்துவிட்டேன் முழுவதுமாய்
நம்புகிறேன் இன்னும் அதிகமாய்
என் சுக வாழ்வை நீர்
துளிர்க்க செய்யும் நேரம் இதுவே
நீரே ஆதாரம் என்று அறிந்தேன்
என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன்
எண்ணுக்கடங்கா என் கேள்விக்கெல்லாம்
என்று கிடைக்கும் ஏற்ற பதில்கள்
எத்தனையோ வாக்குகள் நீர் கொடுத்தும்
என்று நிறைவேறும் என்ற நிலைகள்
காத்திருக்கும் காலம் எதிர்காலங்களை மாற்றும்
காயங்களும் கூட கரம் நீர் பிடிக்க ஆறும்
உம் சித்தம் அழகாக நிறைவேறும்
நீரே ஆதாரம் என்று அறிந்தேன்
என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன்
நித்தம் உம் வாக்கை நம்பி நடப்பேன்
நீர் செய்வதெல்லாம் நன்மைக்கென்று
உணர்ந்துகொண்டேன்
ஆசைகள் ஆயிரம் எனக்கிருந்தும்
அனைத்தும் தந்தேன் உந்தன் கரத்தில்
ஆழ்மனதில் அது வலித்தும்
அதிலும் மேலாய் நீர் தருவீர் என்றேன்
உம் விருப்பம் ஒன்றே அது என் விருப்பமாகும்
நீர் தருவதெல்லாம் நிறைவாய் நிலைப்பதாகும்
உம் திட்டம் தடையின்றி நிறைவேறும்
நீரே ஆதாரம் என்று அறிந்தேன்
என் ஆசைகளை உம்மிடத்தில் விட்டுக்கொடுத்தேன்
நித்தம் உம் வாக்கை நம்பி நடப்பேன்
நீர் செய்வதெல்லாம் நன்மைக்கென்று
உணர்ந்துகொண்டேன்
என்னைவிட எனக்கெது சிறந்தது
என்று அறிந்தவர் அவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லித்தந்து
கலங்காதே என்றவரே
என் நல்ல எதிர்காலம் அவரே
என் இதயமெங்கும் நிறைந்தவரே
Details
- Numeric ID
- 784
- Song ID
- neerae-aadhaaram-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0