Neere En Nambikai நீரே என் நம்பிக்கை

நீரே என் நம்பிக்கை

Lyrics

உன்னதமானவரே (நான்) உம்மையே நம்பியுள்ளேன் உம் தயவால் நான் அசைக்கப்படுவதில்லை தீயோன் சூழ நினைத்தாலும் குழியில் தள்ள முயன்றாலும் என் நம்பிக்கைக்கு பாத்திரரே பாதை எல்லாம் முடிந்தாலும் நிலை எதுவாய் இருந்தாலும் என் நம்பிக்கைக்கு உரியவரே நீரே என் நம்பிக்கை, உம்மை நம்புவேன் நீரே என் நம்பிக்கை, உம்மை நம்புவேன் வேஷம் போடும் மனிதர்கள் (எனக்கு) துரோகம் செய்த போதிலும் என்னை விட்டு விலகாமல் நொடி கூட பிரியாமல் உண்மையான நம்பிக்கையானீரே இதுவரை மாறாமல் இருந்தீரே நீரே என் நம்பிக்கை, உம்மை நம்புவேன் நீரே என் நம்பிக்கை, உம்மை நம்புவேன் சேதம் என்னை அழிக்காமல் எத்தன் கையில் சிக்காமல் உம் நிழலில் வைத்தீரே இமைக்காமல் காத்தீரே உறுதியான நம்பிக்கையானீரே இதுவரை காத்து வந்தீரே இயேசு என் நம்பிக்கை, அவரை நான் நம்புவேன் இயேசு என் நம்பிக்கை, அவரை நான் நம்புவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8113
Song ID
neere-en-nambikai-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
4
Source
Open