Neethiyaamo Song நீதியாமோ நீ சொல்லும் ஓய்

நீதியாமோ நீ சொல்லும் ஓய்

Lyrics

நீதியாமோ நீ சொல்லும் ஓய் நெறியுளோரே அறம் செய்யாதிருந்திடில் ஆதுலர்க் கீவதே பாக்கியம் பிறரை ஆதரித்திடுவதே யோக்கியம் ஓகோ பாதகம் செய்யில் நிர்பாக்கியம் மோட்ச பாதை நடக்கில் சிலாக்கியம் தரித்திரர்க் கிரங்குவோன் உடனே இடுவான் தற்பரனுக் கவன் கடனே என்று கருத்துடன் சுருதியில் திடனே உரைத்தார் கடுநெஞ் சகல் மானிடனே அன்புடன் விதவையும் போட்ட காசை அதி வியப்பாய் யேசு காட்டப் புகழ் இன்புடன் அவள் மிசை சூட்ட அதை எவர்களும் அகத்தினில் நாட்ட பிறர் புகழும்படி இன்றே செய்தால் பிரயோசனமில்லை என்றே பரன் மறையதில் விளம்பினார் நன்றே அம் மாதிரி விலகாது நின்றே பரிதானம் வாங்குதல் தீது அதைப் பறித்தறம் செய்தல் தகாது உமக் குரியதில் ஈவது போதம் இதில் ஊன்றி இருப்பதே நீதம் ஏழைகளுக் கீயாது ஆஸ்தி ஐயே ஈண்டு சேர்த்திடில் என்ன கீர்த்தி இதோ வாழுல கடைந்திடில் நேர்த்தி என்றும் வாழலாம் அதுவே மா பூர்த்தி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7535
Song ID
neethiyaamo-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0