Nenjinile Vaetham நெஞ்சிலே வேதம் சொல்லிலே வசனம்
நெஞ்சிலே வேதம் சொல்லிலே வசனம்
Lyrics
நெஞ்சிலே வேதம் சொல்லிலே வசனம்
உன் வாழ்வினில் துணை இருந்தால்
நீ சாத்தானை ஜெயித்திடலாம் அவன்
சேனையை அழித்திடலாம் உன் வாழ்வில்
1. உந்தன் உள்ளத்தில் வசனம் என்றும்
ஜோதியாக எரிந்தால்
தாவீதைப்போல நீயும்
கோலியாத்தை வீழ்த்திவிடலாம்
கூழாங்கல்லும் போதும் ஒரு
கவணும் போதும்
அவன் தலையை வீழ்த்திவிடலாம்
2.கர்த்தருக்கு காத்திருந்தால்
புது பெலனை நீயும் அடைவாய்
கழுகைப் போல செட்டையடித்து
தினம் உயர எழும்பி வருவாய்
தேவபலனும் போதும் அவர்
கிருபை போதும்
நீ ஜெயத்தை பெற்றுவிடலாம்
Details
- Numeric ID
- 7003
- Song ID
- nenjinile-vaetham-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open