Lyrics
நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும்
எந்தன் தகப்பனின் கரங்கள் உண்டு
கனிவோடு காத்துக்கொள்ளும்
எந்தன் கர்த்தரின் கண்கள் உண்டு
வாதைகளோ தீமைகளோ என்னை அணுகிட முடியாது
நான் கிருபையில் வாழ்கிறேன் - நெஞ்சோடு
1.முடியவில்லை சரித்திரமே
முடிந்ததந்த சமுத்திரமே
தொடர்ந்து வந்த படைகளுமே
தகர்ந்தது அந்த அலைகளாலே
என் மேல் உள்ள பாசத்தால் என்னைப் பாதுகாத்து நடத்திடுவார்
எதிராய் வரும் பார்ப்வோனை முறியடித்து என்னை உயர்த்தி விடுவார்
நான் கிருபையில் வாழ்கிறேன் - நெஞ்சோடு
2. விசுவாசம் கொண்டேனே
சுகவாசம் கண்டேனே
திருவசனம் எனக்குத் தந்தார்
அவர் வசமாய் இழுத்துக் கொண்டார்
கானானின் வாழ்வைத் தந்து என்னை மேலாக உயர்த்திடுவார்
தேனாக பாலாக நன்மையானதைத் தந்திடுவார்
நான் கிருபையில் வாழ்கிறேன் - நெஞ்சோடு
Details
- Numeric ID
- 5508
- Song ID
- nenjodu
- Views
- 1
- Downloads
- 1