Nesaravar En Nesaravar நேசரவர் என் நேசரவர் நேசரிலெல்லாம்

நேசரவர் என் நேசரவர் நேசரிலெல்லாம்
Unknown
PPT
Lyrics

Lyrics

நேசரவர் என் நேசரவர் நேசரிலெல்லாம் விசேஷித்தவர் சோகமடைந்தேன் நேசமதால் நேசரவர் என் நேசரவர் 1. வெண்மை சிவப்புமானவரே கண்ணைக் கவர்ந்திடுபவர் அவரே பதினாயிரங்களில் சிறந்தவரே அதிசயமானவர் அவர் பெயரே இவரென் ஆத்தும நேசரே வருவார் எனக்காய் வேகமே 2. அவர் தலை முழுதும் பொன் மயமாமே அவர் தலை மயிர் சுருள் சுருளாமே காகத்தின் நிறம் அவர் முடியாமே லோகத்தின் ஒளி விளக்கவராமே 3. அவர் கண்கள் கண்ணீர் நிறைந்தவைகள் கவரும் புறாக்கண்கள் போன்றவைகள் பாலிலே கழுவப்பட்டவைகள் நேர்த்தியாய் பதிக்கப்பட்டவைகள் 4. அவரின் கன்னங்கள் உதடுகளாம் மலர்களின் வாசம் வீசிடுமாம் தங்க வளையல் போல் அவர் கரமாம் தந்தத்தைப் போல் அங்கம் உடையவராம் 5. ரூபமதில் அவருகிணை அவரே லீபனோன் மகிமை உடையவரே கேதுரு போல் அவர் உயர்ந்தவரே ஏதுமில்லா சிறப்பானவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4143
Song ID
nesaravar-en-nesaravar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open