Nilai Illatha Ulagile நிலையில்லாத உலகிலே அலை

நிலையில்லாத உலகிலே அலை
Unknown
PPT
Lyrics

Lyrics

நிலையில்லாத உலகிலே அலையலையாய் துன்பங்கள் வாழ்க்கை என்னும் படகில் மோதினும் கவலை எனக்கு இல்லையே கர்த்தர் எந்தன் படகிலே இருப்பதாலே தடைகள் இல்லையே -2 அலையை தாண்டுவேன் புயலை தாங்குவேன் மலைகளை தகர்ப்பேன் மரணத்தை ஜெயிப்பேன் இயேசுவாலே எதையும் சாதிப்பேன் 1. வெள்ளம் போலவே சத்துரு கூட்டமாய் சுற்றி நின்று என்னைத் தாக்கினும் உள்ளம் தன்னிலே அச்சம் இல்லையே வல்ல இயேசு என்னில் வாழ்வதால் -2 உலகம் எதிர்த்த போதிலும் கலக்கம் எனக்கு இல்லையே நண்பர் பிரிந்த போதிலும் வருத்தம் எனக்கு இல்லையே கர்த்தர் எந்தன் துணை இருப்பதால் (2) 2.நம்பும் நன்மைகள் தீமையானாலும் நான்கு திசையும் துன்பம் சூழ்ந்தாலும் கண்ணின் இமைகளே ஈட்டியானாலும் கால் தளர்ந்து நான் விழுந்தாலும் கர்த்தர் என்னைத் தாங்குவார் கரங்கள் கொண்டு ஏந்துவார் வாதை துன்பம் போக்குவார் வருத்தம் மாற்றித் தேற்றுவார் கலக்கம் எனக்கு என்றும் இல்லையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5837
Song ID
nilai-illatha-ulagile-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open