Nilaiyilla Ulagathil நிலையில்லா உலகத்தில்

நிலையில்லா உலகத்தில்
Unknown
PPT
Lyrics

Lyrics

நிலையில்லா உலகத்தில் அலைந்தேனையா நினைத்தென்னை அழைத்தீரோ எனதேசையா 1. மறந்தும்மை மறுதலித் தடங்காமலே மனம் போன வழிகளில் நடந்தேனையா மடிந்திடும் என்னைக் கண்டு விரைந்தென்னருகில் வந்து மனதுருகினீரே ஐயா – என் மேல் 2. சிறந்த உம் முகம் காண விரைந்தாசித்தேன் சிலுவையின் தரிசனம் அளித்தீரையா இனிய உன் சத்தம் கேட்டேன் கொடிய என் குணம் விட்டேன் இனிமேல் என் துணை நீரையா – பூவில் 3. உமக்காக என்னையும் நீர் தெரிந்தெடுத்தீர் உமதாவி என்னிலிருந்து பெலனளித்தீர் உமையன்றி பூவில் வேறு அடைக்கலம் எனக்கில்லை உம்மை நம்பி ஜீவிப்பேனையா – இனி 4. அதி சீக்கிரமாய் நீங்கும் உபத்திரவம் அதிக நித்திய கன மகிமை தரும் பலவித இன்னல் கண்டும் சிலவேளை சிட்சை வந்தும் பதறாமல் பொறுப்பேனையா – இன்னும் 5. உடுக்க உடையும் உண்ண உணவும் தந்தீர் இடுக்கமான உம் பாதை எமக்களித்தீர் விசுவாசப் பிரயாணத்தை தொடங்கின தினமுதல் விசுவாசம் பெருகுதையா – என்னில் 6. இருண்ட கெத்சமனேயில் ஒளி தோன்றுதே இனிய இயேசையா உந்தன் திருமுகமோ எனக்குந்தன் அனுபவம் அளித்திட திரும்பவும் தினம் ஜெபம் செய்கின்றேனையா – தேவா 7. எனது மரணமோ உம் வருகை நாளோ எது முன்பு என்னை வந்து அழைத்திடுமோ கடைசி முடிவு நாளில் மறவாதீர் என்னை நாதா கனிவாய் வேண்டுகின்றேனையா – இப்போ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4060
Song ID
nilaiyilla-ulagathil-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open