Nin Paatham Song நின் பாதம் துணை அல்ல…
நின் பாதம் துணை அல்லால்
Lyrics
நின் பாதம் துணை அல்லால்
வேறொரு துணை இல்லை
நித்ய பரம போதா
என் பாவம் போக்கியே
கிருபை புரியும் சுவாமீ
ஏக வஸ்துவான ஏசுக்
கிறிஸ்து நாதா
ஆதி மனிதருக்கன் றோதியபடி
மனு அவதாரமாய்ப் பிறந்தீர்
ஓதும் அனைத்தும் உய்ய
நீதிக்கென்று
தலைசாய்த்துக் குருசில் இறந்தீர்
வேதம் முழுதும் நிறைவேற்றிக்
கடைசியிலே வெற்றி முடியும் சிறந்தீர்
ஏதம் இல்லாத அ னாதி திருமகனே
எங்கும் நிறைந்திலங்கும்
ஏசுகிறிஸ்தென் தேவா
தேவரீருக் கேற்காத குற்றம்
செய்திருந்தாலும்
சித்தம் இரங்கி வாரும்
மேவி எனது வினை யாவும் அகல
இந்த வேளை எனையும் காரும்
பாவிக்குதவியாக மனுவேலே
நீர் பட்ட பாடனைத்தையும் பாரும்
ஆவலாக உனை அடைந்து சரண்
புகுந்தேன்
ஆபத்தை நீக்கும் ஐயா இப்போ
மெய்யாய்
Details
- Numeric ID
- 254
- Song ID
- nin-paatham-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open