Nirpanthamana Paaviyai Naan Inge Song பாமாலை: 293 நிர்ப்பந்தமான பாவியாய்

நிர்ப்பந்தமான பாவியாய்

Lyrics

1. நிர்ப்பந்தமான பாவியாய் நான் இங்கே தேவரீருக்கே முன்பாக மா கலக்கமாய் நடுங்கி வந்தேன், கர்த்தரே; இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். 2. ஆ! என் குரூர பாவத்தால் மிகுந்த துக்கம் அடைந்தேன்; ஆ ஸ்வாமீ, துயரத்தினால் நிறைந்த ஏழை அடியேன், இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். 3. என் குற்றத்துக்குத் தக்கதாய் செய்யாமல் தயவாய் இரும்; பிதாவே, என்னைப் பிள்ளையாய் இரங்கி நோக்கியருளும்; இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். 4. என் நெஞ்சின் திகில் தணித்து, என்மேல் இரங்கி ரட்சியும்; திவ்விய சந்தோஷம் அளித்து எப்போதும் கூடவே இரும்; இரங்குமேன், இரங்குமேன், என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4992
Song ID
nirpanthamana-paaviyai-naan-inge-song-chords-ppt
Views
1
Downloads
1