Oru Murai Vittu Song 153 Pamalai Song Lyrics
Pamalai Song Lyrics
Lyrics
1 ஓர் முறை விட்டு மும்முறை
சீமோன் மறுத்தும் ஆண்டவர்,
"என்னிலே அன்புண்டோ"? என்றே
உயர்த்தபின் கேட்டனர்
2 விஸ்வாசமின்றி க் கர்த்தரை
பன்முறை நாமும் மறுத்தோம்;
பயத்தினால் பலமுறை
நம் நேசரை விட்டோம்.
3 சீமோனோ சேவல் கூவுங்கால்
மனம் கசந்து அழுதான்;
பாறை போல் நின்று பாசத்தால்
கர்த்தாவைச் சேவித்தான்.
4 அவன் போல் அச்சங் கொள்ளினும்,
நாமோ மெய்யன்பு கூர்ந்திலோம்;
பாவத்தால் வெட்கம் அடைந்தும்
கண்ணீர் சொரிந்திலோம்.
5 நாங்களும் உம்மை விட்டுமே
பன்முறை மறுதலித்தும்,
நீர் எம்மைப் பார்த்து, இயேசுவே,
நெஞ்சுருகச் செய்யும்.
6 இடறும் வேளை தாங்கிடும்
உம்மைச் சேவிக்கும் கைகளும்,
உம்மை நேசிக்கும் நெஞ்சமும்
அடியார்க்கருளும்.
Details
- Numeric ID
- 5449
- Song ID
- or-murai-vittu
- Views
- 0
- Downloads
- 0