Oru Maruntharum Kurumarunthu …

ஒரு மருந்தரும் குருமருந்து
Unknown
Lyrics

Lyrics

ஒரு மருந்தரும் குருமருந்-(து) உம்பரத்தில் நான் கண்டேனே. அருள் மருந்துடன் ஆனந்த மருந்து, ஆதியிற்றனாய் முளைத்த மருந்து, வரும் வினைகளை மாற்றும் மருந்து, வறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து. — ஒரு 1. சிங்கார வனத்தில் செழித்த மருந்து, ஜீவதரு மீதில் படர்ந்த மருந்து, அங்குவிளை பவம் மாற்றும் மருந்து, வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து — ஒரு 2. மோசே முதல் முன்னோர் காணா மருந்து, மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து, தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து, தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து — ஒரு 3. தீராத குஷ்டத்தைத் தீர்த்த மருந்து, செவிடு குருடூமை தின்ற மருந்து, மானா திருத்துவ மான மருந்து, மனுவாய் உலகினில் வந்த மருந்து. — ஒரு 4. செத்தோரை உயிரோ டெழுப்பும் மருந்து, ஜீவன் தவறா தருளும் மருந்து, பத்தரைச் சுத்திகரித்திடும் மருந்து, பரம வாழ்வினில் சேர்க்கும் மருந்து. — ஒரு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2719
Song ID
oru-maruntharum-kurumarunthu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0