Lyrics
பாதம் ஒன்றே வேண்டும் :-இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உன்
1.நாதனே, துங்க மெய்-வேதனே ,பொங்குநற்
காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய-
2.சீறும் புயலினால்-வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல்-நீர்மேல் நடந்த உன்-
3.வீசும் கமழ் கொண்ட-வாசனைத் தைலத்தை
ஆசையுடன்-மரி-பூசிப் பணிந்த பொற்-
4.போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்,
நீக்கிடவே மரந்-தூக்கி நடந்த நற்-
5.நானிலத்தோர் உயர்-வான் நிலத் தேறவல்
ஆணி துளைத்திடத்-தானே கொடுத்த உன்-
6.பாதம் அடைந்தவர்க்-காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு-நாதனே, என்றும் உன்-
Details
- Numeric ID
- 7205
- Song ID
- paadham-ondre-vendum
- Views
- 0
- Downloads
- 0