PAARUNGAL THODARNTHU பாருங்கள், தொடர்ந்து வாருங்கள்

பாருங்கள், தொடர்ந்து வாருங்கள்

Lyrics

பாருங்கள், தொடர்ந்து வாருங்கள், கொல்கதா பாதையிற், கோதையரே. ஆருங் காணவே ஆட்டுவாசல் கடந்து மலை மேட்டில் நடந்தனந்தங் கோட்டிகள் படுகின்றார் பொன்னாய் ஒளிரு மேனி மண்ணாய் மடியுதே, புங்க உடலெல்லாம் புழுதிகள் படியுதே, நன்னய மலர்க் கண்கள் கண்ணீர்கள் வடிக்குதே, நாவும் அஸ்தியும் காய்ந்து சாவுமே பிடிக்குதே. பாவியைத் தேடி வந்த பாதங்கள் பொரியுதே, பட்சத்தினால் விரித்த கைகளும் நெரியுதே, நாபிக்கமலம் பற்றிக் கோபித்துக் கரியுதே, நடையு முடையுந் தொய்ந்து சதைகளும் சரியுதே. திருமுக அருள் ஒன்றும் தெரியாதடைந்ததே, செங்குரு திகளெல்லாம் பொங்கி வடிந்ததே, சருவ வல்லபம் குன்றித்திறையும் நிறைந்ததே, ஜகமும் பரமுந் துக்க சாகரத்தழுந்துதே. துன்ப துரிதத்திலும் அன்பையே பொழிகின்றார், துட்டர்கள் அதற்காகத் திட்டுகள் மொழிகின்றார், அன்பாய்ப் பிழைக்கத் தமதாவியைக் கெடுக்கின்றார், அந்தோ நசரேத்தையர் நொந்தடி எடுக்கின்றார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
652
Song ID
paarungal-thodarnthu-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
6
Downloads
0
Source
Open