Paaviyaam Enai Mevipaarpaaviyaam Enai Mevipaar பாவியாம் எனை மேவிப்பார் ஐயா
பாவியாம் எனை மேவிப்பார் ஐயா
Lyrics
பாவியாம் எனை மேவிப்பார் ஐயா யேசுநாதா ஸ்வாமி பட்சமாக என் பாவந் தீர் ஐயா
தேவத்ரோகி பாவி நான் அன்றோ யேசுநாதா ஸ்வாமி சீர்பதம் துணையன்றி வேறுண்டோ
தீவினையுறு சாவு மேவிற்றே யேசுநாதா ஸ்வாமி
சித்தம் வைத்திரட்சித்தாள் ஏழையே
சஞ்சல மிகுந்தஞ்சல் ஆயினேன் யேசுநாதா ஸ்வாமி
தங்கும் உனை விட்டெங்கே ஏகுவேன்
மனது வாக்கு வினைகளில் எல்லாம் யேசுநாதா ஸ்வாமி
மாசுளோனாய்க் கூசினேன் ஐயா
என்தன் நீதி ஓர் கந்தை அல்லவோ யேசுநாதா ஸ்வாமி
என்செய்வேனே மறு தஞ்சம் இல்லையே
அலகையோடெனை உலகம் ஏய்க்குமே யேசுநாதா ஸ்வாமி
ஆதரவில்லை பாதுகா ஐயா
மன்னுயிர்க் கெனத் தன்னுயிர் விட்ட யேசுநாதா ஸ்வாமி
வந்தெனது நிர்ப்பந்தம் பார் ஐயா
Details
- Numeric ID
- 675
- Song ID
- paaviyaam-enai-mevipaarpaaviyaam-enai-mevipaar-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open