Baliyidu Thuthi Baliyidu பலியிடு துதி பலியிடு

பலியிடு துதி பலியிடு

Lyrics

பலியிடு துதி பலியிடு வலி விலகும் வாழ வழி பிறக்கும் – 2 துதிபலி அது சுகந்த வாசனை நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2 பலியிடு துதி பலியிடு வலி விலகும் வாழ வழி பிறக்கும் 1. துதிபலி செலுத்திட பொருத்தனை செய்ததும் மீன் அன்று கக்கியது கரையிலே – 2 யோனாவைக் கக்கியது கரையிலே – அன்று – 2 துதிபலி அது சுகந்த வாசனை நன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2 பலியிடு துதி பலியிடு வலி விலகும் வாழ வழி பிறக்கும் 2. நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர் சுகந்த வாசனையாய் – 2 பலுகிப் பெருகச் செய்தார் – 2 3. நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில் ஆலயத்தை மேகம் மூடியது – 2 கண்டார்கள் கர்த்தர் மகிமையை – 2 4. சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால் கட்டுக்கள் கழன்று போயின – 2 அதிகாரி இரட்சிக்கப்பட்டான் – அந்த – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7321
Song ID
paliyidu-thuthi-paliyidu
Views
0
Downloads
0