Yesuvey Ummai 258 Pamalai Song Lyrics

Pamalai Song Lyrics

Lyrics

1. கேள்! ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்யம் ஏறுதே; அவர் பாவ நாசகர், சமாதான காரணர்; மண்ணோர் யாரும் எழுந்து விண்ணோர் போல் கெம்பீரித்து பெத்லெகேமில் கூடுங்கள், ஜென்ம செய்தி கூறுங்கள் கேள்! ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்யம் ஏறுதே. 2. வானோர் போற்றும் க்றிஸ்துவே! லோகம் ஆளும் நாதரே, ஏற்ற காலம் தோன்றினீர், கன்னியிடம் பிறந்தீர்; வாழ்க, நரதேவனே அருள் அவதாரமே! நீர், இம்மானுவேல், அன்பாய் பாரில் வந்தீர் மாந்தனாய். கேள்! ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்யம் ஏறுதே. 3. வாழ்க, சாந்த ப்ரபுவே! வாழ்க, நீதி சூரியனே மீட்பராக வந்தவர், ஒளி, ஜீவன் தந்தவர்! மகிமையை வெறுத்து, ஏழைக் கோலம் எடுத்து, சாவை வெல்லப் பிறந்தீர் மறுஜென்மம் அளித்தீர், கேள்! ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்யம் ஏறுதே.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2482
Song ID
pamalai-258-yesuvey-ummai-song-lyrics
Views
6
Downloads
0
Source
Open