பரலோக வாசனே பூலோக நேசனே Paraloga Vaasane

Paraloga Vaasane
Unknown
PPT
Lyrics

Lyrics

பரலோக வாசனே பூலோக நேசனே மனுக்கோலம் கொண்டவரே பாரினில் வந்துமே தம்முயிர் தியாகமாய் தியாகமாய் தந்தவரே பரிசுத்த வாழ்வதை பரலோகில் பெற்றிட பரனே நீர் வந்திட்டீரே பாவி எம் வாழ்வதை பாசமாய் மாற்றியே பரதீசில் சேர்த்திட்டீரே கெத்சமெனேயிலே சீஷர்கள் உறங்கவே விழித்திருங்கள் என்றவரே கல்லெறி தூரத்தில் கல்லொன்றின் மீதிலே கதறியே ஜெபித்தவரே கயவர்கள் மத்தியில் காயத்தை மாற்றவே கனிவோடு இரங்கினீரே துரோகியாய் மாறின சீஷனைப் பாசமாய் சிநேகிதா என்றவரே ராஜாக்கள் நடுவிலே ராஜாதி ராஜன் நீர் நீசனாய் மாறினீரே கல்வாரி மலையிலே கள்ளர்கள் நடுவிலே கர்த்தா நீர் தொங்கினீரே பகைவர்க்கும் அருள் செய்யும் பரனே உம் பாசத்தை சிலுவையில் காண்பித்தீரே தந்தையின் கைகளில் ஜீவனைத் தந்து நீர் பரகதி சேர்ந்திட்டீரே வானங்கள் அதிரவே சேவகர் நடுங்கவே வல்லமையாய் எழுந்திட்டீரே சீஷர்கள் மத்தியில் காட்சியை தந்துமே தேற்றியே தாங்கினீரே மாட்சியாய் மேகத்தில் தூதர்கள் சூழவே பரத்துக்கு ஏகினீரே மாட்சி நகர் லோகத்தில் எம்மையும் சேர்க்கவே ராஜனாய் வருவீரே பரலோக வாசனே பூலோக நேசனே மனுக்கோலம் கொண்டவரே பார் போற்றும் வேந்தனே பாவியின் நேசனே பார் மீட்க வந்தவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7017
Song ID
paraloga-vaasane-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open